நியூசிலாந்து செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி – போட்டி அட்டவணை இதோ!

இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் டிசம்பர் 4-ஆம் திகதி நியூசிலாந்துக்கு செல்லவுள்ளது.

அங்கு இலங்கை – நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 15-ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

டிசம்பர் 15ஆம் திகதி முதல் டெஸ்ட் போட்டியும், 26ஆம் திகதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறும்.

2019ஆம் ஆண்டு ஜனவரி 3, 5 மற்றும் 8 ஆம் திகதிகளில் முறையே 3 ஒருநாள்  போட்டிகள் நடைபெறவுள்ளன. இதன் பின்னர் ஜனவரி 11ஆம் திகதி ஒரு டி20 போட்டி நடக்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]