நியூசிலாந்துடனான டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

நியூசிலாந்துடனான டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் மோதிய பரபரப்பான முதலாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் த்ரில் வெற்றியை சுவீகரித்துள்ளது.

அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவரான சர்ஃப்ராஸ் அகமது முதலில் துடுப்பெடுத்தாடுவதாக தீர்மானித்தார்.

ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய பாபர் ஆசாம் மற்றும் பார்ஹான் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஹபீஸ் மற்றும் ஆஷிப் அலி ஆகியோர் ரங்களைக் குவித்தனர்.

சிறப்பாக ஆடிய ஹபீஸ் 45 ஓட்டங்களுக்கும், ஆஸிப் அலி 24 ஓட்டங்களுக்கும், அணித்தலைவரான சர்ஃப்ராஸ் அகமது 34 ஓட்டங்களையும் குவித்தனர்.

பாகிஸ்தான் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களைக் குவித்தது.

பந்துவீச்சில் நியூசிலாந்து சார்பாக மில்னே 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

149 என்ற வெற்றி இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைக் குவித்து 2 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

அவ் அணி சார்பில் முன்றோ 58 ஓட்டங்களை அதிகபட்சமாகக் குவித்து ஆட்டமிழந்தார். கடைசிவரை வெற்றிக்காக போராடிய ரோஸ் டெய்லர் ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களைக் குவித்தார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஹசன் அலி 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக ஹபீஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இரண்டாவது டி20 போட்டி வெள்ளிக்கிழமை (02-11) நடைபெறவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]