நியாயமான சம்பளமொன்றை அரசாங்கம் வழங்க தவறும் பட்சத்தில் அமைச்சு பதவியை துறப்போம் என்கிறார் இராதாகிருஷ்ணன்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளமொன்றை அரசாங்கம் வழங்க தவறும் பட்சத்தில் அமைச்சு பதவிகளை துறப்பது நிச்சயம் என, விசேட அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பெய்ன்டர்ஸ் ஞாபகார்த்த கல்லூரியில் ஆரம்ப பாடசாலைக்கான கட்டடம் நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வரலாற்றில் பல கூட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஆனால் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூட்டு ஒப்பந்தமாக இந்த ஒப்பந்தம் மாறியிருக்கின்றது.

கூட்டு ஒப்பந்தத்தில் நீக்கப்பட்டுள்ள 140 ரூபாய் ஊக்கத் தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என நாம் அரசாங்கத்தை கோரியிருக்கிறோம். இதனை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இதற்கு மாற்றீடாக ஏதேனும் மானியத் தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும்.

இதனை அரசாங்கம் வழங்க மறுத்தால் நாம் அமைச்சு பதவிகளை துறப்பது நிச்சயம். அதில் எவ்வித மாற்றமும் இல்லை. எங்களுக்கு அமைச்சு பதவியைவிட எங்களுடைய மக்களின் வாழ்வாதரமே மிகவும் முக்கியமானது” எனத் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]