கூன் விழுதல் என்பது ஒரு முக்கிய பிரச்னை நம்மை அறியாமலே நமக்கு அது ஏற்படும் சாத்தியங்கள் அதிகம் நாம் அமரும் நிலையை பொறுத்து கூன் ஏற்படும்
முதுகை வளைத்து உட்காருவதால் முதுகெலும்பு பாதிப்புகள், தசை பாதிப்புகள் வருகின்றன.

எப்போதும் நிமிர்ந்து உட்கார்ந்திருப்பதற்கு நெதர்லாந்தை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் பாலின் வான் டோன்கென் புதிய உடையை வடிவமைத்துள்ளார்சு விட்சர்லாந்தைச் சேர்ந்த, ‘ஷோயெலர்’ நிறுவனம் தயாரிதுள்ளது.’பிசியோபால்’ எனப்படும் இந்த உடைகழுத்து, தோள்பட்டைகள், முதுகுப்பகுதிகளை கண்காணிக்கும் உணர்வான்கள் பொறுத்தப்பட்டுள்ளது எப்போதெல்லாம் முதுகை வளைத்து அமருகின்றோமோ அப்போதெல்லாம் லேசாக அதிர்ந்து, நிமிர்ந்து உட்காரும்படி நினைவூட்டும்.

ஒரு மணி நேரத்தில் அவர் எத்தனை முறை கூன் நிலைக்கு சென்றார் என்பதையும்மொ பைல் செயலி ஓர் அறிக்கையாகவே தயார் செய்து காண்பிக்கும். இதனை சாதாரண உடைகள் போலவே துவைக்கும் இயந்திரத்தில் போட்டு துவைக்கவும் முடியும்