நிபுணர் குழுவொன்று புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்வது குறித்து ஆராய நியமனம்

நிபுணர் குழுவொன்று புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்வது குறித்து ஆராய நியமனம்

கல்வி அமைச்சானது 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை மறுசீரமைப்பதா அல்லது ரத்து செய்வதா என ஆராய நிபுணர் குழுவொன்றை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஊடகவியளார்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இது குறித்து தெரிவித்திருந்தார்.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்ததாவது,

மாணவர்களின் எதிர்காலத்தினை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையானது தீர்மானிக்கப்போவதில்லை என்றார்.

அப்பரீட்சையானது மாணவர்களின் நினைவூட்டலை பரீட்சித்துப் பார்க்கும் பரீட்சையாகும். எனினும், இப்பரீட்சைதான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகின்றது என எண்ணி பெற்றோர் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.

இப்பரீட்சையை இரத்து செய்யவேண்டும் அல்லது சீரமைக்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர்.

இவ்விவகாரத்தை ஆராய குழுவொன்று அமைக்கப்படும். அக்குழுவின் தீர்மானத்துக்கமைய முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

க. பொ.த. சாதாரண தரப் பரீட்சை, க. பொ.த. உயர் தரப் பரீட்சைகளை டிசம்பர் மாதத்தில் நடத்துவது குறித்தும் பரீசிலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]