நிபுணன்: ரசிகர்களுக்கு இடையே அபிமானம்  கூடி உள்ளது…

ரசிகர்களை யூகிக்க விட முடியாத திருப்பங்கள், திறமையான நடிப்பு என்று ஒரு  திரில்லர் படம் வெற்றி பெற பல்வேறு அடிப்படை தகுதிகள் உண்டு.

அவற்றில் ஒன்று கூட குறையாமல் ஒருங்கிணைந்து தயாரிக்க பட்ட படம் ‘நிபுணன்’ . அர்ஜுன், பிரசன்னா, வரலக்ஷ்மி, வைபவ், ஸ்ருதி ஹரிஹரன் என பல்வேறு நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இந்த படத்தை இயக்கி இருப்பவர் அருண் வைத்தியநாதன்.

வித்தியாசமான விளம்பர யுத்தி, ரசிகர்களின் ஏகோமித பாராட்டு,  ஊடகங்களின் சிறப்பான விமர்சனம் என்ற கூட்டணி இப்போது படத்தின் வெற்றியை உறுதியாகி உள்ளது. 285 காட்சிகளில் கடந்த வெள்ளி அன்று துவங்கிய ‘ நிபுணன்’ இன்று திங்கட்கிழமை அன்று மேலும் 30 காட்சிகள் கூட  பெற்று உள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

அக்ஷன் கிங் அர்ஜுனின் 150ஆவது படம் இது என்பதால் ரசிகர்கள் இடையே படத்துக்கு ஒரும் வரவேற்பு கிடைத்து உள்ளது.

நிபுணன் ரசிகர்களுக்கு

அஜீத் குமாருடன் அர்ஜுன் நடித்து இருந்த ‘மங்காத்தா’ திரைப்படத்துக்கு பிறகு இந்த திரைப்படத்தில அவருக்கு ரசிகர்களுக்கு இடையே அபிமானம்  கூடி உள்ளது .பிரசன்னவின் நேர்த்தியான நடிப்பும், அவருடைய வசனத்தில்  மேலோங்கி உள்ள நகை சுவையும் .ஜோசப் என்கிற அவர் கதாபாத்திரத்தை ரசிகர்கள் அழைக்கும் போதே அந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் ஏற்று கொண்டனர் என்பது ஊர்ஜிதமாகிறது.நவீணின்  பின்னணி இசை மிக சிறந்த பாராட்டை பெற்றது.

இத்தகைய படங்கள்  வெற்றி பெறுவதன் மூலமாக திரை உலகம் எப்பேர்ப்பட்ட சவாலையும் சந்திக்கும் என்கின்றனர் திரை உலக வல்லுனர்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]