நின்றது கார்த்தியின் தேவ் பட படப்பிடிப்பு !

குலு மணாலியில் ஏற்பட்ட கன மழை , பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் நின்றது கார்த்தியின் “ தேவ் “ பட படப்பிடிப்பு !

கார்த்தியின் தேவ் திரைப்படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடைபெறுவதாக இருந்தது. கன மழை , பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் தேவ் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் 140 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகிறார்கள். படப்பிடிப்பு நின்று போனதால் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு 1 1/2 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதை பற்றி நடிகர் கார்த்தி கூறும் போது , தேவ் படத்தின் படப்பிடிப்பை குலு மணாலியில் அழகிய மழை மற்றும் பனிச்சாரலுக்கு நடுவே படம்பிடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் திடீரென்று நேற்று நிலைமை மிகவும் மோசமானது. வெள்ளம் மற்றும் நில சரிவு ஏற்பட்டு. கார் , பஸ் மற்றும் பல பொருட்களை அடித்து சென்றது. நிலச்சரிவினால் பாறைகள் உருண்டு வந்ததை நானே கண்டேன். வேகமாக வந்த வெள்ளம் சின்ன சின்ன பாறைகளை அடித்து வந்தது. இந்த பதற்றமான சூழ்நிலையை பார்க்கும் போது ஒரு நிமிடம் உயிரே போய் வந்தது போல் இருந்தது. இதனால் படப்பிடிப்புக்கு காரில் சென்றுக்கொண்டிருக்கும் போது கடுமையான டிராபிக் ஏற்பட்டது. இதனால் ரோட்டில் சென்ற கார்களும் நகரவே இல்லை. 4-5 மணி நேரம் நான் காரியிலேயே இருக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது. பிறகு அருகில் இருந்த கிராமத்துக்கு சென்று தங்க ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே தங்கியிருக்கிறேன். ஆனால் எங்கள் படக்குழுவினர் 140 பேரை நினைத்தால் தான் வருத்தமாக உள்ளது. அவர்கள் எங்கே தங்குவர்கள் , சாப்பிடுவார்கள் எப்படி கீழே இறங்குவார்கள் என்று வருத்தமாக உள்ளது.

23 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ள இந்த நிலச்சரிவால் மக்கள் பயன்படுத்தி வந்த பாதைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த பாதைகள் சரி செய்யப்பட கண்டிப்பாக 28 மணி நேரம் தேவைப்படும் என்றும். அது வரை படக்குழுவினாரால் கீழே இறங்க முடியாது என்றார் நடிகர் கார்த்தி.

இந்த பாதிப்பால் தயாரிப்பாளர் லட்சுமணனுக்கு 1.5 கோடிக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

கார்த்தியின் தேவ் கார்த்தியின் தேவ் கார்த்தியின் தேவ்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]