நினைவுக்கூறல் என்ற பேரில் இராணுவத்தை விமர்சிப்பவர்களுக்கு தக்கப் பாடத்தை புகற்றுவோம் : பாதுகாப்பு அமைச்சர்

நினைவுக்கூறல் என்ற பேரில் இராணுவத்தை விமர்சிப்பவர்களுக்கு தக்கப் பாடத்தை புகற்றுவோம் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை அனுஸ்டிக்கும் வாரத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம் வவுனியா பிரதேச சபைக்கு அருகில் அமைந்துள்ள பண்டார வன்னியின் சிலைக்கு முன்னாள் மூன்றாம் நாள் நினைவுச் சுடர் ஏற்றும் நிகழ்வு வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்திருந்த சிவாஜிலிங்கம்,

இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடைபெற்றது. 2009ஆம் ஆண்டு இறுதியுத்ததில் மாத்திரம் ஒன்றறை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.

எனவே, இறந்தவர்களை நினைவுக்கூற 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் ஏற்பாடுகள் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் ஒழுங்குச்செய்யப்பட்டுள்ளது. சர்வதேச பங்களிப்புடன் விசாரணை அவசியம், தமிழ் மக்களின் சுயநிர்யணத்துடன் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியே மேற்படி நிகழ்வு ஒழுங்குச் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

சிவாஜிலிங்கம் வெளியிட்டிருந்த மேற்படி கருத்துத் தொடர்பில் பதிலளித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன,

வடக்கில் நான்கு ஐந்து பேரை கூட்டிக்கொண்டு ஒரு விளக்கை ஏற்றிவிட்டு எமது இராணுவத்தை விமர்சனம் செய்யும் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

அவர்களுக்கு நான் கூறுவதாவது, இராணுவத்தினர் பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தின் காரணமாகவே சிவாஜிலிங்கம் போன்றோர் நாடகமாட முடிகிறது. டயஸ் போராக்களிடம் பணத்தை பெற்றுக்கொள்ளவே இந்த நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். எதிர்காலத்தில் தொடர்ந்து இவ்வாறு அவர் செயற்பட்டால் அவர்களுக்குத் தக்க பாடத்தை புகட்டுவோம் எனக் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]