நித்திரையில் இருந்து எழும் போது இவற்றை எல்லாம் பார்த்தால் அதிர்ஷ்டமாம்!

ஆன்மீகப்படி ஒருவர் நித்திரையில் இருந்து கண் திறந்து முதன் முதலில் பார்க்கும் காணும் பொருட்கள் மங்களகரமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

அந்தவகையில் ஆன்மீக நெறிப்படி காலையில் கண் விழித்ததும் என்ன என்ன பொருட்களை பார்த்தால் என்ன பயன் வந்து சேரும் என்று இங்கு பார்ப்போம்.

தூக்கத்தில் இருந்து எழுந்ததும் செல்வ மகளான மகாலட்சுமியின் படத்தை பார்ப்பதால் அன்றைய தினம் மங்களங்கள் பல உண்டாகும்.

தூக்கத்திலிருந்து கண் விழிக்கும் போது முகம் பார்க்கும் கண்ணாடியில், தன் முகத்தையே பார்ப்பதால் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

உங்களின் அன்பிற்குரியவர்களான தாய், மனைவி அல்லது உங்கள் குழந்தைகள் ஆகியோரின் முகத்தில் விழிப்பதும் நல்லது.

காலையில் எழுந்ததும் கண் விழித்து முதன் முதலில் சூரியனை தரிசிப்பது சிறந்தது.

தாமரைப் பூ, சந்தனம், கடல் மற்றும் அழகான இயற்கைக் காட்சிகளை காலை கண் விழித்ததும் பார்ப்பது உடலுக்கும், மனதிற்கும் உற்சாகம் தந்து அன்றைய தினத்தை சிறப்பானதாகும்.

பயிர்கள் விளையும் வயல், சிவலிங்கம், கோயிலின் ராஜகோபுரம், உங்கள் வீட்டில் வளர்க்கப்படும் பசுமாடு, நறுமணம் வீசும் மலர்கள் நிறைந்த பூந்தோட்டம் ஆகியவற்றை காலையில் எழுந்ததும் கண் விழித்து பார்ப்பது மனதிற்கு உற்சாகத்தை தந்து அன்றைய தினத்தை இனிமையான நாளாக ஆக்குகிறது.

தினமும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் தூக்கத்திலிருந்து எழுந்து, நடைப்பயிற்சி செய்து, சூரிய தரிசனம் செய்தால் அனைத்து தினங்களும் சிறப்பானதாக இருக்கும் என்பது அனுபவம் வாய்ந்த பெரியோர்களின் கருத்தாக உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]