நிதி வழங்குவதை தடுக்கும் பிரேரணைக்கு 122 எம்.பிக்கள் ஆதரவு- பிரேரணை நிறைவேறியது

நம்பிக்கையில்லா பிரேரணைகள் மூலம் தோற்கடிக்கப்பட்ட அரசின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் அமைச்சுக்களிற்கு நிதி வழங்குவதை தடுக்கும் பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.

பாட்டலி சம்பிக்க ரணவக்க சமர்ப்பித்த இந்த பிரேரணை மீதான விவாதம் நடந்து வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இலத்திரனியல் முறை வாக்கெடுப்பு நடக்குமென சபாநாயகர் அறிவித்தார்.

122 எம்.பிக்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அமைச்சுக்களிற்கு நிதி வழங்குவதை நிறுத்தும் பிரேரணை நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]