நிதி மோசடி விசாரணைப் பிரிவில் டி.பி. ஏக்கநாயக்க ஆஜர்

டி.பி. ஏக்கநாயக்க

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் ஆஜராகியுள்ளார்.

கடந்த 24 ஆம் திகதி முன்னாள் இராஜாங்க அமைச்சரை நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

அன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வு இருந்தமை காரணமாக சமூகமளிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]