நிதி நிறுவனங்கள் புதிதாக நுண்கடன் வழங்குவதற்கு அனுமதி இல்லை

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் எக்காரணம் கொண்டும் எந்தவொரு நிதி நிறுவனமும் புதிதாக நுண்கடன் வழங்குவதற்கு அனுமதி இல்லை ஏற்கனவே வழங்கப்பட்ட நுண்கடனை மீளப்பெறுவதற்கு வீடுகளுக்கு செல்ல முடியாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் நுண்கடன் வழங்குவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆராயும் கூட்டம் திங்கட்கிழமை (18) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் உதவி பிரதேச செயலாளர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன். உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அ.கருணாகரன், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேசத்தில் நுண்கடன் வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

நுண்கடனை மீளச் செலத்த முடியாமல் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு மாத்திரம் 80க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளனர். தில் ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் 20ற்கும் மேற்பட்ட தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நுண்கடன் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களை ஏறூவூர்ப்பற்று பிரதேசத்தில் அனுமதிப்பதா? இல்லையா? எனத் தீர்மானம் எடுப்பதற்காக இந்த விஷேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத அமைப்புக்களுக்கு கடன் வழங்க முடியாது. வலிந்து உதவும் அமைப்புக்களாக பதிவு செய்யப்பட்ட அமைப்புக்கள் இனிமேல் கடன் வழங்க தடைசெய்ய வேண்டும் அவர்கள் இலபம் ஈட்டும் வகையில் செயற்பட முடியாது,

மத்திய வங்கி சட்ட திட்டங்களை மீறும் நிதி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க முடியாது.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமங்களில் நுண்கடன் பெற்றவர்களின் விபரங்கள் இரண்டு வார காலத்திற்குள் பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

புதிதாக எவருக்கும் நுண்கடன் வழங்க முடியாது வழங்கிய நுண்கடனை மீளப் பெறுவதற்கு வீடுகளுக்குச் செல்ல முடியாது. நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் கடமை நேரம் காலை 8.30 முதல் மாலை 4.30 மணிழவரை வரையறுக்கப்பட்டுள்ளது. பயனாளிகளை தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு கடனை மீளப்பெற வேண்டும்.

நுண்கடன் வழங்குவதற்கான விண்ணப்ப படிவம் தமிழ் தயாரிக்கப்பட வேண்டும். ஒருவர் எத்தனை நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளார் என்ற தகவல் பெறப்பட வேண்டும். கடன் பெறுபவர்களின் வருமானம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

கூட்டத்திற்கு சமூகமளிக்காத நிதி நிறுவனங்கள் பிரதேச செயலாளர் பிரிவில் செயற்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. என நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையடலினையடுத்து தீர்மானிக்கப்பட்டது.

நிதி நிறுவனங்கள் புதிதாக நிதி நிறுவனங்கள் புதிதாக

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected].com