நிஜமான கதாபாத்திரத்தில் நடிக்கும் மெஹரீன்

சுசீந்திரன் இயக்கத்தில் விக்ராந்த், சந்தீப் கிஷன், மெஹரீன் பிர்சாடா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், நெஞ்சில் துணிவிருந்தால்.

Mehreen Pirzada

இந்தப் திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் மெஹரீன் பிர்சாடா.

மெஹரீன் பற்றி அவரிடம் கேட்டபோது, “நான் பஞ்சாபி பெண். படித்தது, வளர்ந்தது எல்லாம் கனடா மற்றும் நியூயார்க்கில். படித்து முடித்துவிட்டு, இந்திய அழகிப் போட்டியில் கலந்துகொண்டேன். மெயின் டைட்டில் பெறாவிட்டாலும், பார்வையாளர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டேன். அதன்மூலம் மாடலிங் வாய்ப்புகள் குவிந்தது. பிறகு சினிமாவுக்கு வந்தேன்.தெலுங்கில் நான் நடித்த மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டானது” என தன்னை பற்றி சுருக்கமாக கூறியுள்ளார்.

Mehreen Pirzada
மேலும் நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தை பற்றி கேட்டபோது ஜனனி என்ற கேரக்டரில் நடிக்கிறேன். மற்றவர்களைக் கலாய்த்து சந்தோஷமாக இருக்கும் ஜாலியான பெண் கேரக்டர். நிஜ வாழ்க்கையிலும் நான் அப்படித்தான். கதையில் ஜனனி சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பாள். நிஜ வாழ்க்கையில் இக்கட்டான சில நேரங்களில் நானும் அப்படி தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுத்திருக்கிறேன். சினிமாவில் நடிக்க வந்தது கூட அப்படியொரு முடிவுதான். என தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]