நாவூரும் சூப்பர் பெப்பர் சிக்கன் – செய்முறை

நாவூரும் சூப்பர் பெப்பர் சிக்கன் – செய்முறை

தேவையானவை :

  • சிக்கன்                                        -1/2 கிலோ
  • மிளகுத்தூள்                               – 4 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள்                          – 1 டீஸ்பூன்
  • வெங்காயம்                               – 100 கிராம்
  • பச்சை மிளகாய்                        – 4
  • உப்பு                                             – தேவையான அளவு
  • எலுமிச்சம் பழம்                       – 1/2
  • பொட்டு கடலைத்தூள்            – 1 கை
  • எண்ணெய்                                 – 1 குழி கரண்டி
  • கறிவேப்பிலை                           – சிறிதளவு

செய்முறை :

சிக்கனை துண்டுகளாக்கி , வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும் , அத்துடன் மிளகாயையும் கீறி கொள்ளவும்.

ஒரு அகலமான கிண்ணத்தில் மிளகுத்தூள், மிளகாய்த்தூள் , எலுமிச்சம் பழச்சாறு, பொட்டுக்கடலைத்தூள் , போதுமான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

இந்த மசாலாவில் சிகனைத் தோய்த்து ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறி வேப்பிலை போட்டு தாளிக்கவும்.

நறுக்கிய வெங்காயத்தையும் , கீறிய மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.

மசாலா தோய்த்த சிக்கனை எண்ணையில் பொரித்தெடுத்து தாளித்த வெங்காயத்துடன் சேர்த்து இறக்கினால் பெப்பர் சிக்கன் ரெடி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]