நாவலப்பிடிய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்வு

நாவலப்பிடிய பஸ் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த பாடசாலை மாணவன் மற்றும் சிறுவன் ஒருவருமே இன்று உயிரிழந்துள்ளார்.

நேற்று நாவலப்பிட்டி நகரிலிருந்து தொளஸ் பாகை நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ் வண்டியொன்று கோணவல என்ற இடத்தில் பாதையை விட்டு விலகி 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 64 பேர் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி மற்றும் கண்டி வைத்திய சாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பஸ் சாரதியின் கவயீனம் காரணமாகமே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளதாக நாவலப்பிடிய பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தோரின் விபரம் வருமாறு, குறுந்து வத்தை மேரிவில தோட்டத்தைச் சேர்ந்த கருப்பன் தியாக ராஜா 58 வயது, நாவலப்பிட்டி அலுகொல்ல கிராமத்தைச்சேர்ந்த கியான் ரஸ்மிக்க 13 வயது மற்றும் 57 வயது பாக்கிய ஜோதி என்ற பெண்னொருவருமே உயிரிழந்துள்ளந்தவர்கள்.

விபத்தில் காயமுற்றவர்கள் தொடர்ந்த சிகிச்சைப் பெற்றுவருவதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]