நாவற்குழியில் புதிய பௌத்த விகாரை: தாதுகோபத்தை அமைக்க நாட்டப்பட்டது அடிக்கல்

நாவற்குழியில் புதிய பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கு இராணுவத்தினர் கடந்தவாரம் அடிக்கல் நாட்டியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் தெற்கில் இருந்து கொண்டுவரப்பட்ட சிங்களமக்கள் தென்மராட்சி நாவற்குழியில் உள்ள அரசகாணிகளில் குடியமர்த்தப்பட்டிருந்தனர்.

நாவற்குழியில்

இவர்களின் வழிபாட்டுக்காக பௌத்த ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அங்கு விகாரைக்கான தாதுகோபத்தை அமைப்பதற்கு கடந்தவாரம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

ஒரு கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இந்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இராணுவத்தின் 523 பிரிகேட் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் திசநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]