நாள் சம்பளத்தை வழங்க மறுகிறது நிர்வாகம் லெட்சிமித் தோட்டத் தொழிலாளர்கள் அதிருப்தி

நாளாந்தம் 17கிலோ தேயிலை கொழுந்தை பறிக்கவேண்டும் என்று நிர்வாகம் அழுத்தம் கொடுத்துவருவதை கண்டித்து பொகவந்தலாவ லெட்சுமி தோட்டம் மத்திய பிரிவுத் தோட்டத் தொழிலாளர்களை இன்று காலை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தில் நாள் ஒன்றுக்கு தோட்டத் தொழிலாளி ஒருவர் 17கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு ஏற்ப கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளப் போதிலும் கொழுந்து குறைவாகக் காணப்படும் காலப்பகுயில் 14, 15, 16 கிலோ கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தின் படி நாள் ஒன்றுகான கொடுப்பனவாக 730ரூபா வழங்கப்பட வேண்டும். இது இவ்வாறிருக்க கொழுந்து குறைவாகக் காணப்படும் காலப்பகுதியில் 10 15 கிலோ தேயிலை கொழுந்து பறிக்கும் தொழிலாளருக்கு 730ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் மறுப்புத் தெரிவித்து வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் போது தேயிலை கொழுந்து அதிகமாகக் காணப்படுகின்ற காலப்பகுதியில் நாளொன்றிற்கான வேதனத்தை பெற்றுக்கொள்வதற்காக 17கிலோ தேயிலை பறிக்கப்பட வேண்டும் எனவும் தேயிலை கொழுந்து குறைவாகக் காணப்படுகின்ற காலப்பகுதியில் 14, 15, 16 கிலோ கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தின் படி நாள் ஒன்றுகான கொடுப்பனவாக 730ரூபா வழங்கப்பட வேண்டும் எனவும் தேயிலை மலைகளில் நிறைந்திருக்கும் களைகளையு அழித்து தேயிலை மலைகளை தோட்ட நிர்வாகம் தூய்மைப்படுத்த வேண்டும் எனவும், இந் நிபந்தனையை தோட்ட நிர்வாகங்கள் மீறினால் வழக்கு தொடரப்படும் எனவும் அன்மையில் ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது இ.தொ.கா பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.

ஆனால், தற்போது கூட்டு ஒப்பந்த நிபந்தனைகளை மீறி ஒரு சில தோட்ட நிர்வாகங்கள் செயற்படுவதாகவும் கூட்டு ஒப்பந்தத்தின் போது கைசாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரதி தோட்ட நிர்வாகங்களுக்கு கிடைத்துள்ள போதிலும் மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் அதில் உள்ளடங்கப்படவில்லை என்று நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது தோட்ட நிர்வாகம் வலியுறுத்துகின்றது.

தேயிலை கொழுந்து அதிகமாகக் காணப்படும் காலத்திலும் சரி, கொழுந்து குறைவாகக் காணப்படும் காலத்திலும் சரி ஒரு தோட்டத் தொழிலாளி கட்டாயமாக 17கிலோ தேயிலைக் கொழுந்து பறித்தால் மாத்திரம் அவர்களுக்கு 730ரூபா கொடுப்பனவு வழங்க முடியும் என்று திட்டவட்டமாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனவே, தமக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிக்கு லெட்சுமிதோட்டம் மத்திய பிரிவு தொழலாளர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியக நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று கூறிறுகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]