நாளை முதல் அவள் உலகமெங்கும்

நடிகர் சித்தார்த் நடிகராவதற்கு முன் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.

aval

நடிக்க வந்தபிறகு நடிப்பில் முழுகவனம் செலுத்தி வருகிறார்.

ஆனாலும் தான் பணியாற்றியபோது உடன் பணியாற்றிய நண்பர்களுடன் அடிக்கடி கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

aval

அவர்களில் மிலிண்ட் ராவும் ஒருவர். ஹாலிவுட் பாணியில் மிரட்டும் திகில் பேய் படம் ஒன்றை உருவாக்குவது பற்றி இருவரும் ஆலோசித்து வந்தனர்.

அதன் விளைவாக ‘அவள்’ கதை உருவானது.

இப்படத்துக்கு மிலிண்ட் ராவுடன் இணைந்து சித்தார்த் திரைக்கதை எழுதி உள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்து படத்தை தயாரிக்கிறார்.

aval

கதாநாயகியாக ஆண்ட்ரியா நடிப்பதுடன், அதுல்குல்கர்னி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கிரிஷின் இசையமைப்பில், ஷ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவிலும் அவள் திரைப்படம் உருவாகியுள்ளது.

இத்திரைப்படமானது நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

நாளை முதல் அவள்

இந்த நிலையில் அவள் திரைப்படமானது இலங்கையில் ஈரோஸ் பாமன்கடை மற்றும் ரூபி மாளிக்கவத்த திரையரங்குகளிலும், இலங்கை முழுவதும் உள்ள திரையரங்குகளிலும் நாளை மறுநாள் முதல் (04-11-17) மிரட்டவுள்ளது.

ஈரோஸ் மற்றும் ரூபி திரையரங்கில் 10.30,2.30,6.30,9.30 காட்சிகளாக காண்பிக்கப்படவுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு ஈரோஸ் 0112365030 மற்றும் ரூபி 01112327684 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொள்ளலாம்.

ஆன்லைனிலும் உங்களுக்குத் தேவையான டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

www.ticketslk.com/movies/2594/show_movie

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]