நாளை பாராளுமன்ற அமர்வில் தமது பெரும்பான்மையை நிரூபிப்போம் – ரணில் விக்கிரமசிங்க அதிரடி அறிவிப்பு

பாராளுமன்றத்தை நாளை காலை கூட்டி தமது பெரும்பான்மையை நிரூபிப்போம் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் உயர் நீதிமன்றம் ஜனாதிபதியின் பாராளுமன்ற கலைப்பு தீர்மானத்திற்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் அது தொடர்பாக அலரி மாளிகையில் நடத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்புக்கு முன்னர் நாளை 14ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டும் வகையிலேயே ஏற்கனவே வர்த்தமானியை வெளியிட்டிருந்தார்.

நாளை பாராளுமன்ற நாளை பாராளுமன்ற

இதன்படி நாளைய தினத்தில் பாராளுமன்றத்தை கூட்ட முடியும். என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]