நாளை நாடாளுமன்றில் நேர்மையற்ற முறையில் செயற்படுவார்களானால் வாய் மூல வாக்கெடுப்பு நடைபெறும்- மைத்திரியின் அதிரடி அறிவிப்பு

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.

தீவிரமடையும் அரசியல் மோதல் நிலையில், அரசியலமைப்புக்கு எதிராக எதையும் செய்ய மாட்டேன் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

எனினும் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட முதலாவது நம்பிக்கையில்லா பிரேரணையில் தனக்கு பிரச்சினை இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனிவே நாளை மீண்டும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்த மாட்டேன் என ஜனாதிபதி உறுதியளித்தார். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதையும் ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

நாளை நாடாளுமன்றில்

நாளை அவர்கள் நேர்மையற்ற முறையில் செயற்படுவார்களானால் வாய் மூல வாக்கெடுப்பினை ஒத்துக்கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்னர் வரை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]