நாளை நண்பகலுக்கு முன்னர் இறுதி தேர்தல் முடிவு

இறுதி தேர்தல் முடிவு

உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளை நாளை (11) ஆம் திகதி நண்பகலுக்கு முன்னர் வெளியிட்டு முடிக்க முடியும் என தான் நம்புவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

Local Authorities Elections  2018

Local Authorities Elections  2018

Local Authorities Elections  2018

Local Authorities Elections  2018

சற்று முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழு செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இம்முறை தேர்தல் வாக்குப் பதிவுகள் குறைவாக இருக்கும் என பல்வேறு அரசியல் மட்டங்களில் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். இருப்பினும், அதற்கு மாற்றமாக நாடு முழுவதிலும் 65 வீதத்துக்கும் கூடுதலான அளவில் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளன. இதனையிட்டு, சகல இலங்கையர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழு இணைந்து பெருமையையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]