நாளை தலை தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள் இவர்கள் தான்!

நாளைய தினம் தலை தீபாவளி கொண்டாடும் இத்திய திரையுலக பிரபலங்கள் என பார்க்கலாம்.

ஹிப்ஹாப் ஆதிலட்சயா

தலை தீபாவளி

இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகர், இயக்குநர் என பன்முக திறமைகளுடன் நடிகராகவும் வளர்ந்து வரும் ஹிப்ஹாப் ஆதி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி லட்சயாவை திருமணம் செய்துகொண்டார்.

 

 

பாவனாநவீன்

தலை தீபாவளி

நடிகை பாவனா, கன்னட திரையுலக தயாரிப்பாளரான நவீனை காதலித்து கடந்த ஜனவரி 22ம் திகதி திருமணம் செய்துகொண்டார்.

ஸ்ரேயா சரண்ஆண்ட்ரேய் கோஸ்ஷி

தலை தீபாவளி

நடிகை ஸ்ரேயா தனது ரஷ்ய காதலரான ஆண்ட்ரேய் கோஸ்ஷியை, கடந்த மே மாதம் 12ஆம் திகதி திருமணம் செய்துகொண்டார்.

சோனம் கபூர்ஆனந்த் அஹுஜா

தலை தீபாவளி

பிரபல ஹிந்தி நடிகர் அனில் கபூரின் மகளும், நடிகையுமான சோனம் கபூர் தனது காதலர் ஆனந்த் அஹுஜாவை கடந்த மே 8ஆம் திகதி திருமணம் செய்துகொண்டார்.

நமீதாவீரேந்திர சௌத்ரி

தலை தீபாவளி

நடிகை நமீதா கடந்த வருடம் நவம்பர் 24ம் திகதி தனது நண்பர் வீரா என்கிற வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்துகொண்டார்.

நேஹா துபியாஅங்கத் பேடி

தலை தீபாவளி

நடிகையும், மொடலுமான நேஹா துபியாவும் காதல் திருமணம் செய்துகொண்டார். தனது காதலர் அங்கத் பேடியுடன் கடந்த மே மாதம் 10ஆம் திகதி சீக்கிய முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

மேக்னா ராஜ்சிரஞ்சீவி சர்ஜா

தலை தீபாவளி

நடிகை மேக்னா ராஜ் கடந்த மே மாதம் 2ஆம் திகதி சிரஞ்சீவி சர்ஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் பெங்களூரில் சர்ச்சிலும், இந்து முறைப்படியும் நடைபெற்றது.

கீர்த்தனாஅக்ஷய்

தலை தீபாவளி

நடிகர்-இயக்குநர் பார்த்திபனின் மகள் கீர்த்தனா, கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி அக்‌ஷய் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

மிலிந்த் சோமன்அங்கிதா

தலை தீபாவளி

தன்னை விட 26 வயது குறைவான அங்கிதா என்ற பெண்ணை, நடிகர்-மொடல் மிலிந்த் சோமன் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி திருமணம் செய்துகொண்டார்.

ஆதவ் கண்ணதாசன்-வினோதினி

தலை தீபாவளி

மறைந்த கவிஞர் கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசன் கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி வினோதினியை திருமணம் செய்துகொண்டார்.

சோனியா கபூர்ஹிமேஷ் ரேஷ்மய்யா

தலை தீபாவளி

தொலைக்காட்சி நடிகை சோனியா கபூர் மற்றும் இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மய்யா இருவரும் கடந்த மே 12ஆம் திகதி திருமணம் செய்துகொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]