நாளை சில பகுதிகளில் 18 மணி நேர நீர்வெட்டு

வத்தளை மற்றும் களனி உள்ளிட்ட சில பிரதேசங்களில் நாளை முற்பகல் 9 மணி தொடக்கம் 18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த அறிவிப்பானது, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் இன்று வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், களனி, பெஹலியகொட , வத்தளை, மாபோல மற்றும் பியகம ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த பிரதேசத்திற்கு நீரினை விநியோகிக்கும் பிரதான குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]