நாளை உலக புகழ்பெற்ற ஈஃபில் கோபுரம் மூடப்படுகிறது!

உலகில் உள்ள புகழ்பெற்ற இடங்களில் ஒன்றான ஃபிரான்ஸில் உள்ள ஈஃபில் கோபுரம் நாளையதினம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு அரசாங்க எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில், வீதி வன்முறைகள் அதிகரித்துள்ளன.

இதனைக் கருத்திற்கொண்டே ஈஃபில் கோபுரம் மூடப்படவிருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

பிரான்ஸ் முழுவதிலும் சுமார் 80 ஆயிரம் காவற்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]