நாளைய பரீட்சை தொடர்பில் விசேட கவனம்

நாடு முழுவதும் உயர்தரப் பரீட்சைகள் நாளை (08) ஆரம்பமாகவுள்ள நிலையில் அது தொடர்பில் ஏதாவது முறைகேடுகள் இடம்பெற்றால் உடனடியாக அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முறைகேடுகள் தொடர்பில் 1911 / 0112784208 அல்லது 0112784537 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, பரீட்சைகள் நிறைவடையும் வரை பாடசாலைகளில் நிகழ்ச்சிகளை நடத்துதல், நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளல், மேலதிக வகுப்புகளை நடத்துதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் அனுமதியின்றி வேறு நபர்கள் பரீட்சை மண்டபத்துக்குள் நுழைவதற்கும் அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர்கள் வருகை தருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் விசேடமாக ஆராயப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]