நாளைய தினத்தை வெற்றிக்கான பயணத்தின் ஆரம்பமாக்குவோம்: சஜித்

நாளை நடைபெறவுள்ள மேதினக் கூட்டத்தை வெற்றிக்கான பயணத்தின் ஆரம்பமாக மாற்றிக் கொள்வோம் என அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், வறுமை நிலையில் வாழும் மக்கள் உணர முடியாத பொருளாதார வளர்ச்சி வேகத்தினால் எந்தவித பயனும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், “நல்லாட்சி அரசாங்கம் ஏற்கெனவே பெரும் பங்கு வேலைத்திட்டங்களை செய்துள்ளது. எனினும் தற்போது பலர் அதனை மறந்து போயுள்ளனர்.

அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக உரத்தை வழங்க முடியுமாயின் அது மிகப் பெரிய வெற்றி. நாடு பற்றி சிந்தித்தே நான் இந்த யோசனையை முன்வைத்துள்ளேன்.

60 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க வேண்டும். கிராமிய மக்களை வலுப்படுத்த வேண்டும். பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை.அரசாங்கத்திற்கு இன்னும் 18 மாதங்களே மீதமுள்ளன” என்றும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]