நாளைய அமர்விலும் பார்வையாளர் பகுதிக்கு பூட்டு – ஊடகவியலாளர்களுக்கே அனுமதி

பாராளுமன்றத்தின் பொதுமக்களுக்கான பார்வையாளர் பகுதி மற்றும் சபாநாயகரின் விசேட விருந்தினர் பார்வையாளர் பகுதிகளை நாளை (05) இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்விலும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளருக்கு மாத்திரம் பார்வையாளர் பகுதியில் அனுமதி வழங்கப்படும் என, படைக்கல சேவிதரின் அலுவலகம் அறிவித்துள்ளது.

அத்துடன் பாராளுமன்ற அமர்வை நேரடியாக ஒளிபரப்பவும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக படைக்கல சேவிதரின் அலுவலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளின் போது பார்வையாளர் பகுதியில் இருந்து கூச்சல் மற்றும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 19, கடந்த நவம்பர் 23 மற்றும் நவம்பர் 27 ஆகிய தினங்களில் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போதும் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றம் நாளை (05) முற்பகல் 10.30 மணிக்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]