நாளையதினம் இடம்பெறவுள்ள உள்ளுராட்சிசபை தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் இன்றையதினம் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டது

நாளையதினம் இடம்பெறவுள்ள உள்ளுராட்சிசபை தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் இன்றையதினம் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டது
வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றவிருக்கும் தேர்தல் அதிகாரிகளின் தலைமையில் பொலிசாரின் பாதுகாப்பு உதவியுடன் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் யாழ் தேர்தல் மத்திய ஸ்தலமான யாழ் மத்திய கல்லூரி வளாகத்திலிருந்து மாவட்டம் முழுதிவதிலுமுள்ள 526 வாக்குச்சாவடிகளுக்கும் எடுத்துச்செல்லப்பட்டது.

ஓவ்வொரு வாக்களிப்பு நிலையங்களுக்கும் தனித்தனி பேருந்கள் மூலம் இந்த வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டதுடன் தீவகப்பகுதிகளுக்கான வாக்குப்பெட்டிகள் கடற்படையினரின் உதவியுடன் விசேட படகு மூலம் அனுப்பவும் ஏற்பாடுகள் இடம்பெற்றது.

நாளையதினம் வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமுகமாகவும் 2000 மேற்பட்ட பொலிஸார் மாவட்டம் முழுவதிலுமுள்ள வாக்குச்சாவடிகளிலும் வாக்குகள் எண்ணும் இடங்களிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இம்முறை ஆறாயிரத்திற்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் பணிகளுக்கென அமர்த்தப்பட்டுள்ளனர்.

நாளையதினம் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க யாழ் மாவட்டத்தில் நான்கு லட்சத்து அறுபத்தெட்டாயிரத்து நானூற்றி எழுபத்தாறு பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் இவர்கள் வாக்களிப்பதற்கென மாவட்டம் முழுவதிலுமுள்ள 243 வட்டாரங்களிலும் 541 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்ட்டுள்ளதாகவும் யாழ் மாவட்ட அரச அதிபர் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது