நாளைக் காலை 8 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு?

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நாளைக் காலை 8.30 மணிக்கு நடத்துவதற்கு சபாநாயகர் அழைப்புவிடுத்துள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியன அங்கம் வகிக்கின்றன.

கட்சித் தலைவர் கூட்டத்தில் நாடாளுமன்ற அமர்வைக் கூட்டுவது தொடர்பில் முடிவு எட்டப்படும் என்று அறியமுடிகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]