நாலக்க டி சில்வாவிற்கும் இந்தியப் பிரஜைக்கும் விளக்கமறியல் நீடிப்பு

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா மற்றும் இந்திய பிரஜை தோமஸ் மர்சர் ஆகியோரை தொடர்ந்தும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ் உள்ளிட்டோரை வடக்கு- கிழக்கு பகுதிகளில் வைத்து கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேகநபரான நாலக்க டி சில்வா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை கோரிக்கை தொடர்பிலான தீர்ப்பு எதிர்வரும் 11 ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]