நாய் கூட உண்ண முடியாத முந்திரிப் பருப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாக கூறும் ஜனாதிபதி

நாய் கூட உண்ண முடியாத முந்திரிப் பருப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாக கூறும் ஜனாதிபதி

நாய் கூட உண்ண முடியாத முந்திரிப் பருப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் நேற்றைய தினம் விவசாயிகளை சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘அண்மையில் காத்மண்டுவில் இருந்து புதுடெல்லி வழியாக கொழும்புக்கு வருவதற்காக சிறிலங்கன் விமான சேவையில் பயணித்தேன்.

இதன்போது, என்னால் உண்ண முடியாத, தரம் குறைந்த முந்திரிப் பருப்பு எனக்கு வழங்கப்பட்டது.’ என்று தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இவ்வாறு மனிதர்களால் சாப்பிட முடியாத, நாய் கூட சாப்பிடாத இந்தப் பருப்புகளை கொள்வனவு செய்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]