சிறுவர்களின் நாயகன் பெட்மேன் காலமானார்

ஏழு தலைமுறை நடிகரும் பேட்மேன் தொலைகாட்சி தொடரில் பிரபலமானவருமான ஆடம் வெஸ்ட் இரத்த புற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்டு தனது 88 வயதில் உயிரிழந்தார்.

இந்த தகவலை ஆடம் வெஸ்ட் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவரது உறவினர்கள் பதிவிட்டுள்ளனர்.

1966 இல் படமாக்கப்பட்ட தொலைகாட்சி தொடரில் பேட்மேன் கதாபாத்திரத்தை ஆடம் வெஸ்ட் ஏற்று நடித்தார்.

பேட்மேன் கதாபாத்திரம் ஆடம் வெஸ்ட்-ஐ புகழின் உச்சத்திற்கு அழைத்து சென்றது.

எனினும் இந்த கதாபாத்திரம் இவரை வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஒத்துழைக்கவில்லை.

வாஷிங்டன் நகரின் வல்லா வல்லாவில் 1928 ஆம் ஆண்டு பிறந்த ஆடம் வெஸ்ட் இயற்பெயர் வில்லியம் வெஸ்ட் ஆண்டர்சன் ஆகும்.

நடிப்பு துறையில் கால் பதிக்க தனது பெயரை மாற்றிக் கொண்டார்.

ஆடம் வெஸ்ட் தனது மனைவி மார்கெல், ஆறு குழந்தைகள், ஐந்து பேரன், பேத்திகள் மற்றும் இரண்டு பெரிய பேரப்பிளைகளுடன் வசித்து வந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]