நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாவதனை எவராலும் தடுக்க முடியாது

நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாவதனை எவராலும் தடுக்க முடியாது என மகிந்த ராஜபக்ஷவின் நாடாளுமன்ற விவகார செயலாளர் குமாரசிறி ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், வயதை காரணம் காட்டி ஜனாதிபதித் தேர்தலில் போட்டிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் எதிர்காலத்தில் ஒரு நாள் நாமல் ராஜபக்ஷ நாட்டின் தலைவர் பதவிக்கு வருவதை எவராலும் தடுக்க முடியாது என செயலாளர் குமாரசிறி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரின் ஜனநாயக உரிமைகளை பறிக்க மேற்கொண்டுள்ள முயற்சியை உலகில், மனித உரிமைகளை மதிக்கும் எவரும் அங்கீகரிக்க மாட்டார்கள். தடைகள் மூலம் மக்களின் ஆதரவை வென்றெடுத்தவர்களின் எதிர்கால பயணத்தை நிறுத்த முடியாது என்றார்.

நாடு தற்போது அராஜக நிலையில் உள்ளதாகவும், நாட்டின் பொறுப்பு மகிந்த ராஜபக்ஷவின் கைகளுக்கு செல்ல வேண்டும் என நாட்டின் பெரும்பான்மையான மக்கள் கூறுவதாகவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் திகதி கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]