நாமல் குமார மற்றும் அமித் வீரசிங்க இன்று அதிரடி கைது

ஊழல் ஒழிப்பு படையணியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன

நேற்று மற்றும் நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இன்று முற்பகல் முறைப்பாடொன்றை தாக்கல் செய்வதற்காக வரகாபொலை காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்த போது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் மஹாசோன் படையணியின் தலைவர் அமித் வீரசிங்க இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவமொன்று தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]