நாமல் எம்.பிக்கு அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு

அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரை நோக்கி பயணிக்க முற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் அமெரிக்கா செல்ல முற்பட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டதாக தனது டுவிட்டரில் நாமல் பதவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கமைய எமிரேட்ஸ் விமான சேவையூடாக அமெரிக்கா செல்வதற்கான அனுமதியை மறுப்பதாக, எமிரேட்ஸ் விமான சேவை நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சரியான விளக்கம் எதுவும் வழங்கப்படாமல் தான் அமெரிக்கா பயணிப்பமு தடுக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

செல்லுபடியான விசா இருந்தும் அமெரிக்கா செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகம் விளக்கமளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]