நாமல் உள்ளிட்ட மூவருக்கு பிணை

நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் சந்தேகநபர்களை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக பெறப்பட்டதாக கூறப்படும் பணத்தில் கவன் கோபரேட் என்ற நிறுவனம் ஒன்றில், 30 இலட்சம் ரூபா பெறுமதியான பங்கைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் நாமல் உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டது.

இதன்படி, நாமல் ராஜபக்ஷ, சுஜானி போகொல்லாகம மற்றும் நித்யா சேனாதி சமரநாயக்க ஆகியோருக்கு அண்மையில் குற்றப் பத்திரிகை வழங்கப்பட்டது.

இந்த வழக்குத் தொடர்பில் மேலும் இரண்டு பிரதிவாதிகள் இன்று ஆஜராகவில்லை.

இவர்கள் வௌிநாடு சென்றிருப்பதாக, அவர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]