நான் ‘த்ரிஷா’வை காதலிக்கவில்லை – சிம்பு

சிம்பு

நான் ‘த்ரிஷா’வை காதலிக்கவில்லை – சிம்பு

கெளதம் மேனன் இயக்கத்தில் ‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்தில் சிம்பு கதாநாயகனாகவும், திரிஷா அவருக்கு ஜோடியாகவும் நடித்தார். விண்ணை தாண்டி வருவாயா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

‘விண்ணைத்தாண்டி வருவாயா-2’ படம் தயாராக இருக்கிறது. இதில் சிம்புக்கு பதில் மாதவன் நடிக்கவிருக்கிறார் என செய்தி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் திரிஷா பற்றி மனம் திறந்தார் எஸ்.டி.ஆர்.

“திரிஷாவை சிறுவயதில் இருந்தே எனக்குத் தெரியும். அவர் நடிக்க வருவார் என்று தெரியாது. ஒரு நாள் திடீர் என்று ஹீரோயின் ஆகிவிட்டார். ஆனால் அவரிடம் பந்தா எதுவும் கிடையாது. எதுபற்றி வேண்டுமானாலும் திரிஷாவிடம் பேசலாம். அதுபோல் அவரும் என்னுடன் தாராளமாக பேசலாம்.

எங்களிடம் இருப்பது நட்பு அல்ல. காதலும் அல்ல. அது ஒருவகையான அன்பு. ஆதரவு” என்று பெருமையாக தெரிவித்துள்ளார். இருவரும் நல்ல நண்பர்கள் என்பதை தான் எஸ்.டி.ஆர் இப்படி கூறி இருக்கிறார் என்று அவருடைய ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]