நான் ஜனாதிபதியாகியிருந்தால் என்னை வளர்த்த கட்சிக்கு மோசம் செய்திருக்க மாட்டேன்- ஜனாதிபதியை சாடும் பொன்சேகா

“நான் ஜனாதிபதியாகியிருந்தால் என்னை வளர்த்த கட்சிக்கு மோசம் செய்திருக்க மாட்டேன். இரவில் ஒன்று, பகலில் ஒன்று பேசியிருக்க மாட்டேன். கறுப்பு கண்ணடி அணிந்து கொண்டு மொரஹாகந்த நீர்த்தேக்கத்துக்குச் சென்று புகைப்படத்துக்கு போஸ் கொடுத்திருக்க மாட்டேன்“

இப்படி நாடாளுமன்றத்திற்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்துள்ளார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

நேற்று முன்தினம் ஐக்கிய தேசிய முன்னணிக்கும், ஜனாதிபதிக்குமிடையில் நடந்த சந்திப்பின் போது, “சரத் பொன்சேகா ஜனாதிபதியாகியிருந்தால், என்னுடன் நீங்கள் வந்து பேச்சு நடத்துவதை போலவெல்லாம் பேசிக் கொண்டிருக்க முடியாது“ என ஜனாதிபதி கூறியிருந்ததாக குறிப்பிட்ட சரத் பொன்சேகா, அதன் பின்னரே மேற்படி விமர்சனத்தை வைத்தார்.

“என்னை நினைவுப்படுத்தாமல் ஜனாதிபதியால் எதையும் செய்ய முடியாது“ என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

தான் ஜனாதிபதியாகியிருந்தால் எதையெல்லாம் செய்திருக்க மாட்டேன் என குறிப்பிட்டார் பொன்சேகா.

“2010 ஆம் ஆண்டு நான் ஜனாதிபதியாகியிருந்தால் 12 பில்லியன் ரூபாய் செலவில் எனது மாவட்டத்தை மாத்திரம் அபிவிருத்தி செய்திருக்க மாட்டேன். கருப்புக் கண்ணாடியுடன் மொரஹாகந்த நீர்த்தேக்கத்துக்குச் சென்று புகைப்படத்துக்கு போஸ் கொடுத்திருக்க மாட்டேன். இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை வௌிநாடுகளுக்கு சென்றிருக்கமாட்டேன். என்னை வளர்த்த கட்சிக்கு மோசம் செய்திருக்க மாட்டேன். இரவு ஒன்றும் பேசி பகல் ஒன்றும் பேச மாட்டேன். பயந்து பயந்து வாழ்ந்திருக்க மாட்டேன்.

அமெரிக்காவில் அரச தலைவர்கள் மற்றும் இராணுவ முக்கியஸ்தர்கள் மனநல மருத்துவ பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பது போல் இங்கும் அப்படி ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]