நான் ஏன் நிர்வாண போட்டோவை வெளியிட்டேன் தெரியுமா?(photos)

நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகை கல்கி கொச்லின். பாலிவுட் நடிகை கல்கி கொச்லின் நிர்வாண போட்டோஷூட்டில் கலந்து கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட படங்களில் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

கல்கியின் புகைப்படத்தை பார்த்த பலரும் கோபம் அடைந்து விமர்சித்தனர். இது குறித்து கல்கி கூறியிருப்பதாவது,

என் புகைப்படத்தை எடுத்தது ஒரு பெண் புகைப்படக் கலைஞர். அதனால் தான் அந்த புகைப்படம் மிகவும் முக்கியம் என்று நினைத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டேன்.

நாம் யார் என்பதை நினைத்து பெருமைப்பட வேண்டும், கொண்டாட வேண்டும். இந்த உலகம் நம்மை பற்றியும், நம் உடம்பை பற்றியும் என்ன நினைக்கும் என்பதை யோசிக்கக் கூடாது.

நான் எதை செய்தாலும் நம்பிக்கையுடன் செய்வேன். நான் செய்யும் செயல்களை நினைத்து இதுவரை வெட்கப்பட்டதே இல்லை. நான் படங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்வதாக சொல்வதில் உண்மை இல்லை.

என்னை தேடி வரும் வாய்ப்புகளில் என் கதாபாத்திரம் சிறப்பாக இருந்தால் உடனே நடிக்க ஒப்புக் கொள்கிறேன். இதுவரை எனக்கு பிடித்த மாதிரி கமர்ஷியல் பட வாய்ப்பு வரவில்லை. அதனால் அந்த வகை படங்களில் நடிக்கவில்லை என்றார் கல்கி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]