நான் இப்படித்தான் நடிப்பேன் எனச் சொல்லும் நடிகை!

கிளமராக நடித்தால்தான் தாக்குபிடிக்க முடியும் என்று சொல்லப்பட்டு வந்தாலும் ஸ்ரீதிவ்யா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட சில நடிகைகள் கிளமராக நடிக்க நோ சொல்கின்றனர்.

அந்த பட்டியலில் சுனைனாவும் சேர்ந்திருக்கிறார். காதலில் விழுந்தேன், மாசிலாமணி, நீர்பறவை, வம்சம், நம்பியார் போன்ற படங்களில் நடித்திருக்கும் இவருக்கு பட வாய்ப்புகள் அரிதாகவே வருகிறது.

கிளமர் வேடத்தில் நடிக்க மறுப்பதால் தான் அவருக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. கடைசியாக அவர் நடிப்பில் கவலை வேண்டாம் படம் திரைக்கு வந்தது. இது ஏ ஜோக்குகள் நிறைந்த படமாக இருப்பதாக விமர்சனங்கள் வந்தன.

இந்நிலையில் சுனைனா புதிய படங்களில் நடிக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார். அவர் தரப்பில் வாய்ப்பு கேட்டுச் செல்லும் போது கிளமராக நடிக்க வேண்டும் என இயக்குனர்கள் சொல்வதால் நொந்து போயிருக்கிறார்.

திறமையை வெளிப்படுத்தி நல்ல நடிகை என பெயர் வாங்கினால் போதும் கிளமர் நடிகை என்ற பெயர் வேண்டாம் என்று சொல்வதால் அவரை இயக்குனர்கள் கண்டு கொள்ளாமல் வேறு ஹீரோயினை தேடிச் செல்கிறார்களாம்.