நான் ஆணாகப் பிறந்திருந்தால் அவரோடு டேட்டிங் சென்றிருப்பேன் – பிரபல நடிகை பற்றி ஸ்ருதி!

நடிகை தமன்னா கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் இவர் தற்போது தேவி 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

தமிழ் தவிர பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் தமன்னா. இந்தநிலையில் நடிகை தமன்னா குறித்து தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஸ்ருதிஹாசன், “எனக்கு தெரிந்து நடிகைகளில் அழகானவர் தமன்னா. அவரோடு நட்பிலிருப்பவர் எவரும் அதை இழக்க விரும்பமாட்டார்கள். நான் ஆணாகப் பிறந்திருந்தால் அவரோடு டேட்டிங் சென்றிருப்பேன். ஏன் எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் அவரையே திருமணம் செய்திருப்பேன் என்று கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]