நான்கு தேர்தல் வன்முறைகள் பொலிஸாரிடம் முறைப்பாடு

தேர்தல் வன்முறைகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று (14) வரை தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடைய நான்று முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன், இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வெலிகம்பளை, பலாங்கொடை மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவுகளில் கடந்த 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் இந்த முறைப்பாடுக்ள பதிவு செய்யப்பட்டுள்ளன.

கைகலப்பு, தாக்குதல் மற்றும் வேட்பாளருக்கு மரண அச்சுறுத்தல் தொடர்பில் இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.