நான்கு இளம் பெண்கள் கடத்தல் பொலிஸார் தீவிர புலன் விசாரணை

நான்கு இளம் பெண்கள் மூன்றுதினங்களில் திடீர் திடீரென காணாமல் போயிருப்பதாக அப்பெண்களின் உறவினர்கள் புத்தலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

புத்தலைப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குக்குரம்பொல என்ற இடத்தைச் சேர்ந்த 34 வயது நிரம்பிய பிரியங்கா நிலந்தி, ஊவா பெல்வத்தையைச் சேர்ந்த 19 வயது நிரம்பிய ஜயந்தி தினேசா லக்மாலி,மகா சென்புர என்ற இடத்தைச் சேர்ந்த 19 வயது நிரம்பிய இரேசா தில்ருக்சி, புத்தலையைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய பாத்திமா ஜெசிமா என்ற நால்வரே கடந்த 1ஆம் திகதி முதல் 3ஆம் திகதிவரையிலான மூன்றுதினங்களில் காணாமல் போயிருப்பவர்களாவர்.

இது குறித்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் புத்தலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மொனராகலை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிபர் சுஜித் வெதமுள்ள,புத்தலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிஎல்.ஐ. விஜயகோன் ஆகியோர்,மேற்படி சம்பவங்கள் குறித்து தீவிரபுலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

காணாமல்போன நான்கு இளம்பெண்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் கிட்டவில்லையென பொலிஸார் தெரிவித்தனர். தொடர்ந்தும் புலனாய்வு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக சிரேஸ்ட பொலிஸ் அதிபர் சுஜித் வெதமுள்ள தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]