நானுஓயா நகரில் விபத்து ஸ்தலத்திலேயே சிறுமி பலி(Photos)

நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில், நானுஓயா நகரின் பாதசாரி கடவையில் பாதை கடக்க முற்பட்ட 6 வயது சிறுமி மீது கனரக வாகனம் மோதியதில் சிறுமி ஸ்தலத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் உயிரிழப்பால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் கனரக வாகனத்துக்கு தீ வைத்து எரித்துவிட்டனர்.

நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற கனரக வாகனமே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது. நேற்றுக் காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நானுஓயா நகரத்திலிருந்து பொலிஸ் வழியாக நானுஓயா ஜேம்ஸ் பீரிஸ் சிங்கள வித்தியாலயத்திற்குச் செல்வதற்கு பாதசாரி கடவையை கடக்க முயன்ற போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

ரதல்ல கீழ்பிரிவு பகுதியை சேர்ந்த ஆக்காஷா தேவ்மிணி என்ற 6 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுமி உயிரிழப்புடன் சம்பவ இடத்தில் கலவரம் ஏற்பட்டதனால் பதற்ற நிலை நிலவியது. பொதுமக்களால் குறித்த கனரக வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டதையடுத்து அங்கு பொலிஸார் விரைந்தனர். எனினும் பதற்றம் தணியாதததால் கட்டுப்பட்டுத்துவதற்கு விசேட அதிரடி படையினர் மற்றும் இராணுவத்தினரும் ஆழைக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தினால் அட்டன் நுவரெலியா ஊடான பொது போக்குவரத்து பல மணி நேரம் முற்றாக தடைப்பட்டது. பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நானுஓயா நகரில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]