நானுஓயாவில் கனரக வாகனம் விபத்து

ஹட்டன் – நுவரெலிய பிரதான வீதியின் கனரகவாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்

நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த கனரக வாகனம், நானுஓயா குறுக்கு வீதியில் நேற்று மாலை விபத்துக்குள்ளானது

விபத்தில் கனரக வாகனத்தில் சாரதி மற்றும் நடத்துநர் காயமடைந்த நிலையில் நுவரெலிய மாவட்ட வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.

வாகனத்தில் திடீரென ஏற்பட் இயந்திர கோளாரே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கும் நானுஓயா பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]