நானுஓயாவின் அழகை சீர்க்கெடுக்கும் துர்நாற்றம்

நானுஓயா நகரம் என்பது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரும் ஒரு அழகான நகரம். இந்நகரத்தின் ஊடகவே நுவரெலியாவிற்கு வருகைதரும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ரயிலில் வருகிறார்கள். நானுஓயாவை நகரம் நீர் வீழ்ச்சிகள் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் அழகு பிரதேசமாகும்.

நானுஓயா நகரத்தில் இந்து ஆலயம், பௌத்த விகாரை, கிறிஸ்துவ தேவாலயம், முஸ்லிம் பள்ளிவாயல் போன்ற புனித தலங்கள் காணப்படுகின்றன. ஆனாலும் நானுஓயா நகரில் துர்நாற்றம் மற்றும் இன்னமும் மாறவில்லை. நானுஓயா நகரத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் நானுஓயாவில் குப்பைகளைக் கொட்டுவதற்கு இடம் ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது.

அண்மைக்காலமாக நுவரெலியா பிரதேச சபையின் குப்பைகள் கந்தப்பளை, ஹக்கல போன்ற இடங்களில் உள்ள குப்பைகளை நானுஓயா நகர குப்பைகள் கொட்டும் இடத்தில் கொட்டுவதை வழமையாக கொண்டுள்ளார்கள். இதற்கு நானுஓயா பிரதேச வாசிகள் பெரும் எதிர்ப்பை தெரிவித்தபோதும் நுவரெலியா அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக பேசப்பட்டு அதற்கான மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஹட்டன் நகரத்தில் உள்ள குப்பைகளை குடாஓயா குப்பைகள் கொட்டும் இடத்தில் அப்பிரதேச மக்கள் பல ஆர்ப்பாட்டங்களை முன்வைத்து குப்பைகள் கொட்டுவதை முற்றாக தடுக்கப்பட்டது. இதனால் குப்பைகளை ஹட்டன் நகரத்தில் இருந்து அப்புறப்பத்தாமல் முழு ஹட்டன் நகரமே துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டது.

கடந்த மாதம் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் ஹட்டன் நகரசபையில் சேகரிக்கும் குப்பைகளை தலவாக்கலை நகரசபைக்குச் சொந்தமான குப்பைகள் கொட்டும் இடத்தில் கொட்டுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனாலும் ஹட்டன் டிக்கோயா குப்பைகளை இப்போது நானுஓயா நகர குப்பைகள் கொட்டும் இடத்திற்கே வந்து கொட்டுகிறார்கள்.

இதனால் அப்பாதையினூடாக பாடசாலை செல்லும் மாணவர்களும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் வரும் பயணிகளும் ரயிலில் நானுஓயா வழியாக செல்லும் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கிறார். அக்குப்பைகள் கொட்டும் இடத்திற்கு அருகாமையில் மகாத்மா காந்தி ஞாபாகார்த்த மண்டபத்தில் முன்பள்ளி ஒன்று இயங்கிவருகின்றது. இதில் கல்வி பயிலும் சிறுவர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

ஆகையால் இது தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனத்திற்கொண்டு இக்குப்பைகள் கொட்டும் இடத்தை முற்றாக அகற்றுமாறு பிரதேசவாசிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]