முகப்பு News Local News நானுஒயா பகுதியில் இடம் பெற்ற தீ விபத்தில் வர்த்தக நிலையம் ஒன்று முற்றாக சேதம்

நானுஒயா பகுதியில் இடம் பெற்ற தீ விபத்தில் வர்த்தக நிலையம் ஒன்று முற்றாக சேதம்

நானுஒயா பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நானுஒயா டெஸ்போட் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் சம்பவம் காரணமாக குறித்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று முற்றாக ஏறிந்துள்ளதாகவும் வரத்தக நிலையத்தில் உள்ள அனைத்து உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 29.08.2018 விடியற்காலை 02மணி அளவில் இடம் பெற்றதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர். நானுஒயா காவற்துறை நுவரெலியா மாநகர சபை தீயனைப்பு படையினர் நுவரெலியா பிரதேசசபை பொதுமக்கள் ஆகியோர் இனைந்து தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்

இதேவேலை குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அவரின் உறவினர்கள் வர்த்தகநிலையத்தில் இல்லாத போது இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது

குறித்த வர்த்தக நிலையத்தில் சமையல் எரிவாயு இருந்ததனால் இத் தீ பரவலாக பரவியுள்ளதோடு தீ விபத்தினால் அப்பகுதிக்கான மின்சாரமும் துண்டிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. தீயினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரையிலும் கணிக்கபடவில்லையெனவும் தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியபடவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com