நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் – மேர்வின் சில்வா

2020இல் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானால், நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

“ மஹிந்த ஆட்சிக்காலத்தில், வெள்ளை வான் கலாசாரத்தை உருவாக்கியவர் கோட்டாபய ராஜபக்ஷ தான். அந்தக் காலகட்டத்தில் மக்கள் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டனர். கொலை செய்யப்பட்டனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், பசில் ராஜபக்ஷவும், கோட்டாபய ராஜபக்ஷவும் தான் நாட்டை ஆட்சி செய்தார்கள். அப்போது நாட்டுக்கு வந்த முதலீட்டாளர்களிடம் தரகுப் பணத்தை பசில் ராஜபக்ஷ பெற்றுக் கொண்டார்” என மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]