நாட்டை பிளவுபடுத்துவதற்கான முதலாவது படி எடுத்துவைக்கப்படுவதாக மகிந்த குற்றச்சாட்டு

மகிந்த ராஜபக்ஷ
புதிய அரசியல் அமைப்பின் மூலம் நாட்டை பிளவுபடுத்துவதற்கான முதலாவது படி எடுத்துவைக்கப்படுவதாக மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
வெல்லவாய பிரதேசத்தில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இலங்கையின் அரச ஆதரவு கொண்ட மதமாக பௌத்த மதம் நீண்ட காலமாக உள்ளது.
புதிய அரசியல் அமைப்பின் ஊடாக இலங்கையை மத சார்பற்ற நாடாக மாற்ற முயற்சிக்கின்றனர்.
இதற்காகவே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுகின்றது.
பௌத்தமகா சங்கத்தினர் அரசாங்கத்தின் சிலரால் நிந்திக்கப்படுகின்றனர்.
அரசாங்கத்தின் உயர் தலைவர்களின் அனுமதி இல்லாமல் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ள முடியாது.
வரலாற்றில் தேரர்கள் தரக்குறைவாக நடத்தப்படும் நிகழவுகள்; தற்போது இடம்பெற்றுவருவதாக மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]