முகப்பு News Local News நாட்டை பாதுகாக்கும் தேவை உள்ளது – பெசில் ராஜபக்ஸ தெரிவிப்பு

நாட்டை பாதுகாக்கும் தேவை உள்ளது – பெசில் ராஜபக்ஸ தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலின் போது சகல மாவட்டங்களிலும் 50 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவதே நோக்கம் என முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

காலி பிரசேத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் வளம் பெரும்பாலும் விற்பனை செய்யப்பட்டு விட்டன.

எதிர்காலத்திலும் அந்த நடவடிக்கை தொடரும் என்ற அச்சம் எம்மிடம் உள்ளது.

இந்த நிலையில், நாட்டை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது.

அந்த வகையில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வென்றது போல், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது சகல மாவட்டகளிலும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற தமது கட்சி எதிர்பார்த்துள்ளதாகவும் பெசில் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com